TN: இறைச்சி சமைக்கும் போது குக்கர் வெடித்ததில் இருவர் காயம்

70பார்த்தது
TN: இறைச்சி சமைக்கும் போது குக்கர் வெடித்ததில் இருவர் காயம்
சென்னை தியாகராய நகர் பகுதியில் சமைத்து கொண்டிருக்கும் போது குக்கர் வெடித்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். உஸ்மான் சாலையில் உள்ள தனியார் கடை ஒன்றில் இறைச்சி சமைக்கும் போது திடீரென குக்கர் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த முபாரக் (34), அப்சல் (35) ஆகியோர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேற்கு மாம்பலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி