நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே. 04) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் திருப்பூர் சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.