TN: சைபர் மோசடிகளால் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

2855பார்த்தது
TN: சைபர் மோசடிகளால் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு
சென்னையில் கடந்த 5 மாதங்களில் பல்வேறு சைபர் குற்றச் சம்பவங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடியை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்துள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நிதி சார்ந்த சைபர் குற்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை உடனடியாக மீட்டு கொடுக்க சென்னை பெருநகர போலீஸ் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார்.