தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 9) காலை 8 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.