தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 11) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.