தஞ்சை: பட்டுக்கோட்டையில் நகை தொழிலில் ஈடுபட்டுவருபவர் சதீஷ்குமார் (வயது 45). இவர் குடும்பத்துடன் விழுப்புரத்திலிருந்து காரில் வீடு திரும்பியுள்ளார். நேற்று இரவு கும்பகோணம் புறவழிச் சாலையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சதீஷ்குமாரின் மனைவி மனைவி சத்யா(40), மகன் ஸ்ரீராம்(17) ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஷ்குமார், அவரது மகள் அம்பிகா ஸ்ரீ(15) ஆகியோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து போலீஸ் விசாரிக்கிறது.