TN: பேசுவதை நிறுத்திய பெண்ணை கழுத்தறுத்து கொன்றவர் கைது

55பார்த்தது
TN: பேசுவதை நிறுத்திய பெண்ணை கழுத்தறுத்து கொன்றவர் கைது
தென்காசி: பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவன். சலூன் கடை நடத்திவரும் இவருக்கு உமா (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே உமா, பக்கத்து வீட்டிலுள்ள மணிகுமார் (44) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். திடீரென அவருடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்திலிருந்த மணிகுமார், நேற்று முன்தினம் அதிகாலை வீடு புகுந்து உமாவை கழுத்தறுத்து கொன்றுள்ளார். தொடர்ந்து தலைமறைவான அவரை பாவூர்சத்திரம் போலீசார் தேடுதலுக்குப் பின் இன்று(ஜூன் 3) கைது செய்தனர்.