தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்கள் பணம், நகைக்காக அடுத்தடுத்து கொல்லப்படுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி ஒருவர் நகைக்காக கத்தியால் வாயை கிழித்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.