செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 10 மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளுடன் சேர்ந்து ஒரு காட்டு பன்றியும் உயிரிழந்தது விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அந்த இடத்தில் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.