திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி ஆரணி நகரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கொங்குராம்பட்டு ஊராட்சி கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தண்ணீர் பந்தலை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழம், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R. சிவானந்தம், மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், நகர செயலாளர் AC. மணி, ஒன்றிய செயலாளர் M. சுந்தர் துரைமாமது, S. மோகன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அமர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.