வந்தே வட்டக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா

79பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழா மற்றும் விண்வெளியில் முதன் முதலில் கால் பதித்த தினம் உள்ளிட்ட முப்பெரும் விழாவானது ஆசியன் மெடிக்கல் அகாடமியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்கத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர். ராஜசேகர் பங்கேற்று தமிழ் கல்வியும் அறிவியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி