திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூர் கிராமத்தில் ரூ. 47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர், காவேடு, காவேரிப்பாக்கம், மேல்கொடுங்காலூர், கொட்டை, பாதூர், அதியனூர், அதியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கான கால்நடை மருத்துவமனை மங்கலம் மாமண்டூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மருத்துவமனைக்கான புதிய கட்டடம் ரூ. 47 லட்சத்தில் கட்டப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆரணி எம்பி எம். எஸ். தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். மேலும், கால்நடை வளர்ப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு அவர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜியகொடி, உதவி இயக்குநர்கள் ராமன், கவிதா, மருத்துவர்கள் ராஜராஜசோழன், விஜய், திமுக ஒன்றியச் செயலர்கள் கே. ஆர். பழனி, சி. ஆர். பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.