வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

56பார்த்தது
வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, திருவள்ளுவர் படம் திறப்பு விழா, மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள், குறள் காட்டும் பாதை உரையரங்கம் உள்ளிட்ட 'முப்பெரும் விழா' நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு கிளை நூலகர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் க. வாசு, எக்ஸ்னோரா கிளை இயக்குநர் சு. தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் புலவர் மா. மங்கையர்க்கரசி பங்கேற்று, திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து, 'குறள் காட்டும் பாதை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், வழக்கறிஞர் மணி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, தலைமை ஆசிரியர்கள் ஆ. சித்ரா, டி. ஆர். நம்பெருமாள், செம்மொழி மன்ற நிர்வாகி கேப்டன் பிரபாகரன், பட்டதாரி ஆசிரியர்கள் சாந்தி, சக்ரவர்த்தி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் ரகுபதி அவர்களின் திருக்குறள்

தொடர்புடைய செய்தி