திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியாத்தூா், செம்பூா், கீழ்செம்பேடு, காவணியத்தூா் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினருக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையொட்டி சங்க வட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சுகுணா தலைமையில் வந்தவாசி கோட்டை மூலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட பழங்குடியினா் வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா். அங்கு வட்டாட்சியா் ஆா். பொன்னுசாமியிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் மனு அளித்தனா். சங்க வட்டக்குழு துணை ஒருங்கிணைப்பாளா் சுகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் அப்துல்காதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.