அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு

76பார்த்தது
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

இதையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் கோயில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜையும் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மனை வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது.

பின்னா், அம்மனுக்கு வானவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி, விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி