திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் கோவிலில் நேற்று மூன்றாவது சனிக்கிழமையும் முன்னிட்டு காலையில் திருமஞ்சனம் ஸ்ரீ ராமராஜந்திரமூர்த்தி யோக ராமராக தாயார் ஸ்ரீதேவி தம்பி லட்சுமனுடன் பக்தர்களுக்கு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.