உணவே மருந்து என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்

83பார்த்தது
உணவே மருந்து என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி உணவே மருந்து என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். பூங்குயில் சிவக்குமார், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், கற்க கசடற அமைப்பு நிர்வாகி டாக்டர் இரா. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, டாக்டர் காளிச்செல்வம் பங்கேற்று, உணவு பாதுகாப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 07 ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது.

நாம் உண்ணும் உணவே மருந்து ஆகும். நாம் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும், மேலும் குர்குரே, பாஸ்ட் புட், பரோட்டா போன்றவைகளை பெரும்பாலும் உட்கொள்ள கூடாது. தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்வில் எக்ஸ்னோரா கிளை இயக்குநரும், இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான க‌. வாசு அவர்களின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள்‌ வழங்கப்பட்டது. மேலும் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் அ. ஷாகுல் அமீது , மனோஜ் குமார், வந்தை குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி