பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு அலங்காரம்

60பார்த்தது
பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்குமாயி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு குரோதி வருட பிறப்பு முன்னிட்டு மூலமூர்த்திகள் பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் நின்ற கோலத்தில் குருவாயூர் கிருஷ்ணர் போல நீலபட்டாடை உடுத்தி காட்சி தந்தனர். மேலும் புத்தாண்டையொட்டி வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி