திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்னாவரம் ஊராட்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வருகிற 5-ஆம் தேதியுடன் நிறைவடைவதை ஒட்டி, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். வீரராகவன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் எம்பி மு. துரை தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவைகளை பாராட்டிப் பேசினார். மேலும், அனைத்துப் பணியாளர்களுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோகுல் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.