அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவர்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி தெள்ளார் போலீசார் நேற்று (ஜனவரி 1) நரிக்குறவர் குடியிருப்பில் நரிக்குறவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மேலும், ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் உதவி ஆய்வாளர்கள் சத்யா, பாபு, உத்தமபுத்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.