திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் R. வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் K. லோகநாதன், நகர செயலாளர் K. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் AG. திராவிட முருகன், JK. சீனிவாசன், M. தினகரன், CK. ரவிக்குமார், செய்யாறு நகர மன்ற தலைவர் A. மோகனவேல், தொண்டரணி அமைப்பாளர் R. ராம்ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.