திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்யா தலைமையிலான போலீஸாா் வந்தவாசி-தெய்யாா் சாலை, ஏம்பலம் கூட்டுச் சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமாா் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா்(29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து, தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.