திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று இரவு வந்தவாசி தொகுதி, வந்தவாசி நகரத்தில் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து ஒரே இலக்கு
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை கழக பேச்சாளர்களாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார். வந்தவாசி நகர செயலாளர் A. தயாளன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.