சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ வில் கைது

2585பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ வில் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரிய கோரகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் செல்வகுமாா் (31). இவா், 2020-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அப்போதைய தெள்ளாறு காவல் ஆய்வாளா் அல்லிராணி வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தாா்.

இந்த வழக்கு, திருவண்ணாமலை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, செல்வகுமாரை வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்

தொடர்புடைய செய்தி