திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
வந்தவாசி நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்,
தமிழ்நாடு பொதுப் பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
உடன், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்
எம். எஸ். தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஒன்றிய கவுன்சிலர் பார்வதி சீனிவாசன், திமுக கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.