திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெள்ளார் ரோட்டரி கிளப் செயலாளர் முருகன் மற்றும் டிவி கே கட்சியின் தெள்ளார் ஒன்றிய செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர். இந்த விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.