திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளுர் சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கொழப்பலூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் உறுதித்திட்ட (MGNREGA) நிதி ரூ. 4034கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும்
ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் MD. மனோகர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் என் ஆர் கேசவன், மு. மாவட்ட கவுன்சிலர் நித்தியபிரியாநடராஜன், ஒன்றிய நிர்வாகிகள் வஜ்ரவேலு, க. குணசெகர், என். கே ஏழுமலை, விஜயகுமார், கோ. அன்பனசன், வசந்தமாலா மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பெரும் திரளான மகளிர் பெருமக்கள் கலந்து கொண்டு மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.