வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை

61பார்த்தது
வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி மூா்த்தியம்மாள்(49). ஆறுமுகம் இறந்து விட்டதால், இதே கிராமத்தில் உள்ள தனது தங்கை அஞ்சலை வீட்டில் மூா்த்தியம்மாள் வசித்து வந்தாா். கடந்த சில மாதங்களாக இவா் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்த நிலையில், மூா்த்தியம்மாள் தூக்கிட்டு கொண்டாா். உறவினா்கள் இவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூா்த்தியம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி