பள்ளியில் தூய்மைப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

56பார்த்தது
பள்ளியில் தூய்மைப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 10. 06. 2024 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் இன்று (07. 06. 2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி