வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊர்வலம்

68பார்த்தது
வந்தவாசியில் ஐயப்ப சுவாமி ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீஆதி ஐயப்பன் சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. 

இதையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஐயப்பன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நகர முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் தேரடி, பஜார் வீதி, அச்சிறுபாக்கம் சாலை, சந்நிதி தெரு வழியாகச் சென்றது. பக்தர்கள் ஐயப்பன் பாடல்களை பாடிக் கொண்டு உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்தி