திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, ஆவணியாபுரம் சிம்ம மலை மீதுள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருவடி ஆஞ்சநேயர் உடன் கண்ணாடி அறையில் திசைகள் தோறும் பக்தர்களுக்கு அலங்கார ரூபத்தில் அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.