திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள எஸ். கே. வி. தொழில்பயிற்சி நிலையத்தில், குறள் காட்டும் பாதை' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புலவர் ந. பானு தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஓய்வு பெற்ற காவல்துறை அதி காரி மா. கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப. குப்பன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, திருக் குறளை அனைவரும் படித்து அதன்படி நடக்க வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் திருக்குறள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை அவர் வழங்கினார். நிறைவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் திருவேங்கடம் நன்றி கூறினார்.