சென்னையில் இருந்து யூமேஷ் இவர் தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தது அப்போது திடீரென காரின் முன் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது அதி வேகமாக மோதியது
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் ஆகிய ஐந்து பேர் சிறு காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.