திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சன்னதி தெருவிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளரான கீழ்வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் இன்று வங்கிக்கு வந்திருந்தார். அப்போது வங்கியின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.