500 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்

51பார்த்தது
500 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்
வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நகராட்சி மேலாளா் ஜி. ரவி, சுகாதார ஆய்வாளா் எஸ். ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் களப் பணியாளா்கள் காந்தி சாலை, பாக்குக்கார தெரு, அச்சிறுபாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், 5 கடைகளிலிருந்து மொத்தம் 500 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

தொடர்புடைய செய்தி