அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

65பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின்புதிய மகளிர் மாவட்ட செயலாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் மகளிர் புதிய மாவட்ட செயலாளர் சுகந்தி மருதுபாண்டி நியமனம் செய்துள்ளார் அதனை அடுத்துசெங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெண்கலசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதைத் தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகின்ற மது போதை விழிப்புணர்வு மகளிர் மாநாட்டிற்கு பெண்கள் அணிந்து செல்ல இருக்கும் கட்சியின் கொடியின் வண்ணத்தில் தயார் செய்யப்பட்டுள்ள சேலையை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன

இந்த நிகழ்வில்
செங்கம் நகர செயலாளர் ஆட்டோ ஆறுமுகம் டாஸ்மார்க்
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் ரத்தினம் நகரத் துணைச் செயலாளர் சத்யராஜ் நகரப் பொருளாளர் அன்பு ராம் ஏழுமலை ரகு சின்ராசு குணா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி