திருவண்ணாமலை: பாஜகவின் அமைப்புத் தோ்தல்

54பார்த்தது
திருவண்ணாமலை: பாஜகவின் அமைப்புத் தோ்தல்
திருவண்ணாமலை நகர வடக்கு பாஜகவின் அமைப்புத் தேர்தல் நேற்று (டிசம்பர் 28) நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாலசுந்தரம் தலைமை வகித்து, தேர்தலை நடத்தினார். 

இதில், திருவண்ணாமலை நகர வடக்கு பாஜகவின் தலைவராக புகழ் மூவேந்தன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் இணை பொறுப்பாளர் எஸ். அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி. ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலர் வினோத் கண்ணா மற்றும் நகர வடக்கு பாஜகவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி