திருவண்ணாமலை மாவட்டம்: ஜவ்வாது மலை ஒன்றியம், இன்று ஜமுனாமரத்தூர் கிராமத்தில் பக்ரித் பண்டிகையை ஒட்டி அங்கு உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பள்ளிவாசல் நடைபயணம் தொடங்கி ஈத்கா திடல் வரை பயணம் முடிவுற்று சிறப்பு தொழுகை மற்றும் துவாவில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஜமுனாமரத்தூர் துணை காவல் ஆய்வாளர், குற்றப் புலனாய்வு காவல் துறையினர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்