திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கோயில் ராஜகோபுரம் வழியாக பல மணி நேரமாக ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். இந்த நிலையில், கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், கைக் குழந்தைகளுடன் இருந்த தாய்மாா்களை தனியே அழைத்துச் சென்று விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தாா்.
ஆட்சியரின் இந்த முயற்சியால் 30 நிமிஷங்களில் சுவாமி தரிசனம் செய்து மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனா்