திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற வைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமையில், ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ் ஆகியோர் முன்னிலையில், செங்கம் சட்டமன்ற தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு, சதக்குப்பம், வாழவச்சனூர் ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.