காப்பு காட்டுப் பகுதியில் இருந்து புள்ளிமான் திருவண்ணாமலை கலைஞர் அரசு கலைக் கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கலைஞர் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து புள்ளி மானே பத்திரமாக வகுப்பறையில் இருந்து மீட்டு மீண்டும் அண்ணாமலை காப்பு காட்டு பகுதியில் அவிழ்த்து விட்டனர்.
கல்லூரி வகுப்பறையினுள் மான் புகுந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.