திருவண்ணாமலை
ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஏற்றத்தாழ்வு பார்க்கும் சனாதனத்தை ஏற்க முடியாது என்று ப. உ. சண்முகம், தர்மலிங்கம் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ. வ. வேலு பேசினார்.
நூற்றாண்டு விழா
தி. மு. க. முன்னாள் அமைச்சர் ப. உ. சண்முகம், தி. மு. க. முதல் எம். பி. இரா. தர்மலிங்கம் ஆகியோரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை மாதவி பன்னீர்செல்வம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ். தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன் வரவேற்றார்
விழாவில் ப. உ. சண்முகம், இரா. தர்மலிங்கம் ஆகியோரின் உருவப்படத்திற்கு அமைச்சர் எ. வ. வேலு அஞ்சலி செலுத்தி 400 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.