ஆட்சியர் 6 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கினார்.

52பார்த்தது
ஆட்சியர் 6 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கினார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோ. கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, 6 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 2 பேருக்கு வேளாண்துறை சாா்பில் மினி கிட் (உளுந்து) ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். மந்தாகினி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

5 முகாம்களிலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடர்புடைய செய்தி