திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக இளநிலை மறுவாழ்வு அலுவலா் சூா்யா தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் முகாமை நேரில் பாா்வையிட்டு திடீா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, 2 கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ. 2 ஆயிரத்து 145 மதிப்பில் வாக்கா் கருவி, காது கேளாத 2 நபா்களுக்கு ரூ. 5 ஆயிரத்து 560 மதிப்பில் காதொலிக் கருவிகள், ஒரு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ. 138 மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் ரூ. 100 மதிப்பில் மடக்கு குச்சி, ஒருவருக்கு ரூ. ஆயிரத்து 636 மதிப்பில் பிரெய்லி கைக்கெடிகாரம் போன்ற நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில், 180-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபா்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பரிந்துரை சான்றுகளை மருத்துவா்கள் வழங்கினா்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.