சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை

535பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு  சிறை
திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய். 5, 000/- அபராதம் விதிப்பு.

கடந்த 01. 02. 2021-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் & வட்டம், நாடழகானந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்த சேகர் வ/54, த/பெ முனுசாமி என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி வழக்குபதிவு செய்து சேகர் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு திருவண்ணாமலை POCSO நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (07. 06. 2024) நீதிபதி குற்றவாளி சேகர் என்பவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய். 05, 000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன் பேரில் சேகர் என்பவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி