திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உலகம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதையான ஸ்ரீ சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர், சக்தி வீர ஆஞ்சநேயர், கன்னியம்மன் ஆகிய கோவில்கள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலச புறப்பாடுகளுடன் கோவில் கோபுரங்கள் மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திலரான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.