ஊரக வளர்ச்சித் துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் மண்டல மாநாடு

60பார்த்தது
திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். சக்கரபாணி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் எம். கண்ணபிரான், எஸ். சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் என். அசாருதீன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் செ. குணசேகரன், மாநில செயலாளர் த. சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானம் குறித்து விளக்க உரையாற்றினர்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்த தொழில்நுட்ப உதவியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்திட வேண்டும், ஊதியக்குறைப்பு நடவடிக்கை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும், மதிப்பூதியத்தை நிறுத்திவிட்டு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த மண்டல மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி