திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பட்டியந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேல்சோழங்குப்பம், சிறுவள்ளூர்,
வீரளூர், காந்தபாளையம், ஆதமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் குளிர்ச்சியான சூழல் உருவாகி மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.