திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலையில் அமைந்துள்ள அரச மரத்தடி அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் இன்று மாலை முனீஸ்வரன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.