மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

57பார்த்தது
திருவண்ணாமலை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட சந்தை மேடு, சமுத்திரம் ஏரிக்கரை, இந்திரா நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் 200 - க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இது மட்டுமன்றி 100க்கும் மேற்பட்டவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.

நீர்நிலை புறம்போக்கு பகுதி ஆக்கிரமிப்பு எனக் கூறி இவர்களை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 25வது வார்டில் வைரக்குன்று மலை அடிவாரத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான சர்வே எண் 133-ல் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருப்பதி பாலாஜிக்கு நல்லவன்பாளையம் ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி வழங்கப்பட்ட இடத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகள் துவங்க உள்ளது.

இதைத்தொடர்ந்து 300க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர். நீண்ட காலமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு கருணை காட்டி முன்னுரிமை அளித்து இலங்கை தமிழர்களுக்கு மாற்று இடத்தில் வீடு ஒதுக்கி தந்து வருவாய்த் துறைக்கு சொந்தமான சர்வே எண் 133-ல் எங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி